internet

img

ஊழியர்களுக்கு போனஸாக 1000 டாலர்களை அறிவித்த பேஸ்புக்!

பேஸ்புக் நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு போனஸாக 1000 டாலர்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. 

பேஸ்புக் நிறுவனத்தில் 45,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரியும் படி பேஸ்புக் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில், பேஸ்புக் நிறுவனம் அதன் 45,000 ஊழியர்களுக்கு 1000 டாலர்கள் போனஸ் ஆக கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கும் தனது ஊழியர்களை ஆதரிக்கும் விதமாகத் தான் இப்படி ஒரு அதிரடி முடிவை பேஸ்புக் எடுத்துள்ளது. 

இது குறித்து பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்க் ஊழியர்களுக்கு அளித்துள்ள மெமோவில், ஆறு மாத மதிப்பாய்வுக்கான போனஸை ஊழியர்கள் பெறுவார்கள் என்றும் கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.